உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை மேற்கத்தைய நாடுகள் வழங்கி வருகின்ற நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை ஜேர்மனி மற்றும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்று உக்ரைன் கேட்டுக் கொண்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணைகள் உக்ரைனிய எல்லையை தாண்டி ரஷ்ய பிராந்தியத்திற்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்தபடுமானால் அது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அச்சத்தில் உக்ரைனின் கோரிக்கையை ஜேர்மன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனுக்கு டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை வழங்கி ஜேர்மன் மற்றும் அமெரிக்கா உதவ வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகள் உக்ரைனின் வெற்றிக்கு இன்றியமையாதது எனவே அதனை கூட்டாளிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.