ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
மேலும் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த ஜி-20 மாநாட்டில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதுதான் முக்கிய தலைப்பாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக உக்ரைன் தானிய ஏற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு ரஷியா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இது உலகளவில் தானிய தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக உக்ரைன் விவகாரம் பேசுபொருளாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.