ரஷ்யா உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடந்து வருகின்ற நிலையில் இரு தரப்பிலும் பல சேதங்கள் ஏற்படுவதோடு அப்பாவி பொது மக்களும் கொல்லப்பட்டு வருகின்றமை தொடர்கதையாகி வருகின்றது.
இதன் பின்னணியில் தற்போது சில மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுமே ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்கின்ற தாக்குதலை அதிகரித்துள்ள நிலையில் உக்ரைன் தற்போது இரு ட்ரான்களை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது ஏவி இருக்கிறது.
தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேல் ஏவப்பட்ட ஒரு ட்ரானும், மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ பகுதியின் மீது ஏவப்பட்ட ட்ரானும் இடைமறித்து வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.