Sunday, November 24, 2024
HomeLatest NewsWorld Newsஇன்று கலைக்கப்படுகிறது பாக்கிஸ்தான் பாராளுமன்றம்..!

இன்று கலைக்கப்படுகிறது பாக்கிஸ்தான் பாராளுமன்றம்..!

பாக்கிஸ்தான் நாட்டின் பாராளுமன்ற பதவி காலம் வருகின்ற 12 ஆம் திகதியோடு நிறைவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நாட்டினுடைய பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 09 ஆம் திகதி ஆகிய இன்றைய தினம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உள்ளதால் பாராளுமன்றத்தை கலைக்க கோரி பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் அந்த நாட்டின் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கபட்டதால் தேர்தலை நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News