பிரித்தானியாவில் அடைக்கலம் கோரும் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதக்கும் குடியிருப்பில் தங்க முதல்முறையாக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
220 படுக்கையறைகள் கொண்ட அந்த மிதக்கும் குடியிருப்புகளில் இனி எவரையும் அனுப்பாதவகையில் தாங்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலம் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் செலவு 1.9 பில்லியன் பவுண்டுகளை எட்டிய நிலையில், மிதக்கும் குடியிருப்புகளை உருவாக்க ரிஷி சுனக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.