திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வழங்குவதற்கும் குழாய் நெட்வொர்க் அமைப்பதற்கும் சீனா-பாகிஸ்தான் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு பதிலாக, ஒரு இந்திய நிறுவனத்தின் சலுகையை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் மின் உற்பத்தி செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனா-பாகிஸ்தான் எங்ரோ கூட்டமைப்பு கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இந்திய அரசாங்கத்தின் ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, இந்த செயல்முறையை நிறுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அமைச்சரவை ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த டெண்டரை ஒரு இந்திய நிறுவனத்திற்கு வழங்க தற்போது குறித்த அமைச்சகம் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.