வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் அனைத்து பயனர்களும் ‘இதயம்’ ஈமோஜியைப் பொதுவாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் தற்போது குவைத்தில், இந்தச் செயல் சவூதி அரேபியாவில் இருந்ததைப் போலவே குற்றமாக கருதப்படும் என அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
குவைத்தில், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக வலைப்பின்னல் தளத்திலும் ஒரு பெண்ணுக்கு ‘இதயம்’ எமோஜியை அனுப்புவது அநாகரீகமான செயலாகக் கருதப்படுவதோடு, இந்த சட்டத்தை மீறுபவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2,000 குவைத் தினார்களுக்கு மேல் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் சவுதி அரேபியாவிலும், ‘ரெட் ஹார்ட்’ எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதோடு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100,000 சவுதி ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியது.
இதை தொடர்ந்து குவைத் நாட்டிலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் இளைஞர்கள் மத்தியில் இது அதிகம் பேசு பொருளாக மாறியுள்ளது.