கொரிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 70 வது ஆண்டு நிறைவை ஜூலை 27 ஆம் தேதி பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்புடன் வட கொரியா கொண்டாட உள்ளது.
செயற்கைக்கோள் படங்கள் அணிவகுப்புக்கான தயார் நிலைகளை வெளிப்படுத்துகின்றன. முதல் முறையாக, சீன மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எல்லைக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதில் காணப்படுகின்ற புதிய நெகிழ்வுத்தன்மையைக் குறிக்கிறது.
பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தலைமையிலான ரஷ்ய தூதுக்குழுவின் இந்த விஜயம் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிட்பீரோ உறுப்பினர் லி ஹாங்ஜோங் தலைமையிலான ஒரு தூதுக்குழுவையும் சீனா அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டாட்டத்திற்கு வட கொரியா தயாராகி வருவதால் சர்வதேச சமூகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.