முக்கிய வளர்ச்சி பிரச்சினைகளில் ஜி 20 நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிக அளவு ஒருங்கிணைப்பு இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
ஆனால் உக்ரைன் மோதல் தொடர்பில் இந்தியாவுக்கும் ஜி 20 நாடுகளுக்கும் வேறுபாடுகள் நீடிக்கின்றன என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இருக்கும்போது, உக்ரைன் நெருக்கடியை விவரிக்கும் உரை தொடர்பாக ரஷ்யா-சீனா இணைப்பிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கூர்மையான வேறுபாடுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.