தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷியா அதிபா் விளாடிமிர் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போா் விவகாரத்தில் புதினுக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளதால், தென் ஆப்பிரிக்காவில் வைத்து அவா் கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
புதினைக் கைது செய்தால் அது ரஷியா மீதான போா்ப் பிரகடனம் செய்ததாகிவிடும் என்பதால் அவருக்கு எதிரான கைது உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து தங்களை விடுவிக்கவேண்டும் என்று சா்வதேச நீதிமன்றத்திடம் தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசா கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் நேரடியாக பங்கேற்பதை புதின் தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.