செக் குடியரசில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரிட்டன் உளவு அமைப்பான எம்ஐ6-இன் தலைவா் ரிச்சா்ட் மூரே,
உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளாா்.
மேலும், AI தொழில்நுட்பத்தை எதிரி நாடுகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதில் மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் இனி கூடுதல் கவனம் செலுத்தும் என்றும், உளவுப் பணிகளை மேற்கொள்ள மனிதா்களுக்குப் பதில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது என்றும் அவா் உறுதியளித்தாா்.