தென்கொரியா, வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கு நடுவே அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதியை பார்வையிட சென்ற ராணுவ வீரர் உரிய அனுமதி இல்லாமல், தென் கொரியாவில் இருந்து வடகொரிய எல்லையை தாண்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாக அமெரிக்க குடிமக்கள் தற்போதைய நெருக்கடியான சூழலில் வடகொரியா செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே, ராணுவர் வீரர் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, வட கொரியா சந்தேகத்திற்கிடமான இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை அருகிலுள்ள கடலில் ஏவியமையானது ராணுவ வீரர் கைதுக்கும் ஏவுகணை தாக்குதலுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அந்த நபர் வடகொரியாவில் தஞ்சமடைந்துள்ளாரா அல்லது திரும்பி வரும் நம்பிக்கையில் அந்த நாட்டு எல்லையை தாண்டினாரா என்பது குறித்து தகவல் கிடைக்கப்பெறவில்லை.
இதனிடையே, வடகொரியாவில் கைதான வீரரின் பெயர் டிராவிஸ் கிங் எனவும், 2021 ஜனவரியில் இருந்து அவர் ராணுவத்தில் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அவரை விடுவிக்கும் பொருட்டு அதிகாரிகள் தரப்பு பேச்சுவார்த்தைகளை துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.