விளாடிமிர் புடின் அரசாங்கத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காத சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக வெளியான அதிர்ச்சி தகவலை அடுத்து வாக்னர் கூலிப்படை தளபதி ஒருவர் சந்தேக நபராக ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றும் நோக்கில் வாக்னர் கூலிப்படையினர் பயன்படுத்திய அதே பாதையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு அவை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டும் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வாக்னர் தளபதி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஜூன் 24ம் திகதி வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியை ஆதரிக்காதவர்களே கொலை செய்யப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வாக்னர் கூலிப்படையினர் உக்ரைன் ஆதரவு ரஷ்யர்களை முன்னர் சம்மட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான ஆயுத கிளர்ச்சியில் ஆதரவளிக்காத வீரர்களை படுகொலை செய்யும் நிலைக்கு எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.