Tuesday, December 24, 2024
HomeLatest Newsகுழு -7 ஐ விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..!

குழு -7 ஐ விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..!

தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குழு 7 ஐ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது.

விண்வெளி ஆய்வு நிறுவனத்தை அமெரிக்கா, ரஷ்யா , ஜப்பான், சீனா போன்ற சர்வதேச நாடுகள் இணைந்து அமைத்துள்ளன.

இந்த நிலையில், உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவன அதிபருமான எலான் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகின்றது.

அந்த வகையில், கடந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டிராகன் எண்டவர் விண்கலத்தில் குழுவை அனுப்பி வைத்தது.

அதையடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு 7 ஐ விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News