Tuesday, December 24, 2024
HomeLatest Newsகச்சா எண்ணெய் உற்பத்தியை மட்டுப்படுத்தும் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா…..!

கச்சா எண்ணெய் உற்பத்தியை மட்டுப்படுத்தும் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா…..!

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜீலை மாதத்தில் நாள் ஒன்றிற்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது. இதேவேளை இந் நடவடிக்கை ஆகஸ்ட் மாதமும் தொடருமென அந்நாட்டு எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெயின் உற்பத்தியானது நாளொன்றிற்கு 9 மில்லியன் பேரல்களாக இருக்குமென சௌதியின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இந் நிலையில் கச்சா எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபேக் பிளசின் பரிந்துரையில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதேவேளை சவுதி அரசின் இம் முடிவைத் தொடர்ந்து ரஷ்யாவும் ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம பேரல்கள் என்ற அளவிற்கு குறைக்க முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent News