Tuesday, December 24, 2024
HomeLatest Newsசர்வதேச நாணய நிதியத்திடம் அதிகளவு கடன்..!4 ஆவது இடத்தில் பாகிஸ்தான்..!

சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகளவு கடன்..!4 ஆவது இடத்தில் பாகிஸ்தான்..!

சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகளவு கடனைப் பெற்ற நான்காவது நாடாக பாகிஸ்தான் மாற்றமடையவுள்ளது.

பாகிஸ்தான் நாடானது தற்பொழுது, வரலாறு காணதளவு பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளதால் அங்கு பணவீக்கம் மற்றும் விலை உயர்வு போன்றன அதிகரித்துள்ளன. இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

அந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்காக அந்த நாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை வாங்கி வருகின்றது.

அந்த அடிப்படையில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

அத்துடன், சுமார் 3 லட்சம் கோடியுடன் அர்ஜென்டினா இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.

இவ்வாறான சூழலில், சர்வதேச நாணய நிதியத்திடம் மேலும் 3 பில்லியன் டொலர் (சுமார் 24 ஆயிரம் கோடி) கடனை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது.

அந்த வகையில், இந்த கடனை பெற்றுக்கொள்ளும் பொழுது சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகளவு கடன் பெற்ற 4 ஆவது நாடாக பாகிஸ்தான் மாற்றமடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News