Wednesday, December 25, 2024
HomeLatest Newsமனித கழிவுகளால் உரத்தை உற்பத்தி செய்யும் ஜப்பான்..!வரிசை கட்டி நிற்கும் விவசாயிகள்..!

மனித கழிவுகளால் உரத்தை உற்பத்தி செய்யும் ஜப்பான்..!வரிசை கட்டி நிற்கும் விவசாயிகள்..!

பல நூற்றாண்டுகள் பழமையான வழக்கமான மனித கழிவுகளில் இருந்து உரத்தினை தயாரிக்கும் முறையினை ஜப்பான் ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் விலங்கு மற்றும் மனிதக் கழிவுகளின் பயன்பாட்டை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்தது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணாமாக இரசாயன உரத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால், ஜப்பான் பல நூற்றாண்டுகள் பழமையான வழக்கமான மனிதக் கழிவுகள் மூலம் உரத்தினை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மியாகி மாவட்டத்தின் தோமே நகரில் உரத்தின் விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு மார்ச் 160 வீதம் அதிகரித்துள்ளது.

அதாவது, மனிதக் கழிவினால் உருவாக்கப்படும் உரம் மிகவும் மலிவாக காணப்படுவதால் விவசாயிகள் அதனை நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரமானது, சாக்கடைகளையும் மற்றும் மனிதக் கழிவுகளையும் அடிப்படையாக கொண்டு செய்யப்படுகின்றது.

அவ்வாறு தயாரிக்கப்படும் 15 கிலோகிராம் உரம் 160 யென் விலைக்கு விற்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் செய்யப்படும் உரத்துடன் ஒப்பிடும் போது மனிதக் கழிவிலான உரத்தின் விலை மிகவும் குறைவு என்பதால் இந்த உரம் சுற்றாடலிற்கும் ஏற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

Recent News