Wednesday, December 25, 2024
HomeLatest Newsபெண்களின் குதி உயர்ந்த ஹீல்ஸுடன் ஓட்டம்..!உலக சாதனை படைத்த ஆடவர்…!

பெண்களின் குதி உயர்ந்த ஹீல்ஸுடன் ஓட்டம்..!உலக சாதனை படைத்த ஆடவர்…!

ஆடவர் ஒருவர் குதி உயர்ந்த பாதணிகளை அணிந்த நிலையில் ஓட்டப் பந்தயத்தில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த கிறிஸ்டியன் ரொபர்ட்டோ லோபஸ் ரொட்ரிகஸ் என்பவரே அந்த சாதனையை தன்வசமாகியுள்ளார்.

அதாவது, அவர் பெண்களின் 2.76 அங்குலம் குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணிகளை அணிந்து 100 மீற்றர் தூரத்தை 12.82 விநாடிகளில் ஓடி முடித்துள்ளார்.

இதற்கு முன்னர், ஜேர்மனியை சேர்ந்த அன்ட்ரே ஓர்டோல்வ் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 100 மீற்றர் தூரத்தினை ஹை ஹீல்ஸ் அணிந்து 14.02 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், அந்த கின்னஸ் சாதனையை ரொட்ரிகஸ் முறியடித்துள்ளார்.

இவ்வாறாக சாதனை அவர் கூறுகையில்,குதி உயர்ந்த பாதணியுடன் வேகமாக ஓடுவதற்கு தான் தயாராகியது மிகவும் சவாலான ஒன்றாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Recent News