Monday, December 23, 2024

கொரோனா விடயத்தில் நாடகமாடிய சீனா…!போட்டுடைத்த ஆராய்ச்சியாளர்..!அதிரும் உலக நாடுகள்..!

சீனா நடத்திய உயிரி தீவிரவாத தாக்குதலே கொரோனா பெருந்தொற்று என சீன ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வூகான் மாகாணத்தை சேர்ந்த சாவோ ஷாவோ என்ற வைரஸ் ஆராய்ச்சியாளரே இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சாவோ ஷாவோ மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ், சீனாவின் உயிரி ஆயுதமாகும் என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேலதிகாரி ஒருவர், கொரோனா வைரசின் 4 திரிபுகளை தனது நண்பர்களிடம் கொடுத்ததுடன் அதில் எது அனைத்து உயிரினங்களிலும் எளிதாக பரவக் கூடியது என கண்டறியுமாறு கூறினார்.

அத்துடன், 2019 இல் சீனாவில் நடைபெற்ற இராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு வருகை தந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களின் உடல்நிலையை பரிசீலனை செய்வதற்காக சாதாரண மருத்துவர்கள் அனுப்பப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மாறாக வீரர்களின் உடல்நிலையை பரிசீலனை செய்வதற்காக வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டதாகவும்,அதன் மூலம் அவர்களிற்கு கொரோனா வைரசை பரப்பும் நோக்கிலே அவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் சாவோ ஷாவோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக, சீன ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ கூறியிருப்பதானது உலக நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Latest Videos