Friday, November 15, 2024
HomeLatest News16 வகையான நாய் இனங்களை வளர்க்க முடியாது...!தடை விதித்த எகிப்து அரசு....!

16 வகையான நாய் இனங்களை வளர்க்க முடியாது…!தடை விதித்த எகிப்து அரசு….!

ஆபத்தானதாக கருதப்படும் 16 வகையான நாய் இனங்களை வளர்ப்பதற்கு எகிப்து அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்களில் பிட்புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட், பாக்ஸர், ஹஸ்கி, காகேசியன் ஷெப்பர்ட் மற்றும் புல்மாஸ்டிஃப் போன்றனவும் உள்ளடங்குகின்றன.

நாய் வளர்ப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமையே இதற்கு காரணம் என்று கருதப்படுகின்றது .

அந்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ராட்வெய்லர் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் எகிப்து நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஆபத்தானதாக கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்ப்பதற்கு எகிப்து அரசு தடை விதித்துள்ளது.

அத்துடன்,அவற்றை ஒரு மாதத்திற்குள் கால்நடை துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குழந்தையை போல் வளர்த்த நாயை பிரிய மனமில்லாமல் வருத்தத்தில் உள்ள நாய் உரிமையாளர்கள், சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News