சிங்கப்பூரிலிருந்து லண்டன் சென்ற விமானம் ஒன்று நடுவானில் பயங்கரமாக குலுங்கியதால் நிலைதடுமாறி விழுந்த பணிப்பெண்கள் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானமே இவ்வாறு குலுங்கியுள்ளது.
அந்த விமானம் வங்க கடல் மீது 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது மோசமான வானிலை காரணமாக பயங்கரமாக குலுங்கியுள்ளது.
அதனால், விமான பணிப்பெண்கள் 5 பேர் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்த நிலையில் இரு பணிப்பெண்களுக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதனால் அதில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கே திருப்பப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 40 ஆண்டுகளில் விமானம் குலுங்கும் நிகழ்வுகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.