Wednesday, December 25, 2024
HomeLatest Newsபாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயது அதிகரிப்பு...!ஜப்பானில் அதிரடி...!

பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயது அதிகரிப்பு…!ஜப்பானில் அதிரடி…!

ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயது எல்லை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் கடந்த 1907ஆம் ஆண்டு முதல் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லை 13 ஆக இருந்து வந்தது. தற்பொழுது அது 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் பாலியல் சார்ந்த குற்றங்கள் தொடர்பான மற்றும் பலாத்கார வழக்குகளின் விசாரணை போன்ற பல சீர்திருத்தங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த சட்டத்தினை அந்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடிவரும் சிலர் ஆதரித்து பாராட்டி வருகின்றனர்.

அத்துடன், குழந்தைகளிற்கு எதிராக பெரியோர் செய்து வரும் பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்த சீர்திருத்தம் முக்கிய பங்களிப்பினை வழங்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News