சவப் பெட்டியில் இருந்து உயிர்த்தெழுந்த மூதாட்டி தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஈகுவேடாரில் இடம்பெற்றது. அங்கு பெல்லா மொன்டோயா என்ற 76 வயதான மூதாட்டி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் திகதி அந்த மூதாட்டி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு இறுதி கிரிகைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த வாரம் வெளியான காணொளியில், சவப் பெட்டிக்குள் மூச்சிறைப்புடன் காணப்படும் அந்த மூதாட்டிக்கு 2 ஆண்கள் உதவி செய்கின்றனர்.
பெல்லாவின் மகன் கில்பர்ட் பார்பெரா,சவப் பெட்டியின் உள்ளே இருந்து பலமாக தட்டிய அவரால் வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், அவருடைய உறவினர்கள் வருத்தத்தில் இருந்தனர் என கூறியுள்ளார்.
முதல் தடவையாக மூதாட்டி பெல்லா உயிரிழந்து விட்டார் என தவறுதலாக அறிவிக்கப்பட்ட நிலையில், சவப் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட பெல்லா, பாபாஹோயோ நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின்னர் ஸ்டிரோக் பாதிப்பு ஏற்பட்டு கடந்த வெள்ளி கிழமை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மகன் பார்பரா, இந்த தடவை தாயார் உண்மையாக உயிரிழந்து விட்டதாக மண்டல சுகாதார துறை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெல்லா உயிரிழந்து விட்டார் என்று முதன்முறை எப்படி தவறுதலாக அறிவிக்கப்பட்டது என்பது தொடர்பாக சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.