Tuesday, December 24, 2024
HomeLatest Newsதன் கட்டுப்பாட்டிலிருந்த அணையைத் தானே தகர்த்த ரஷ்யா...!

தன் கட்டுப்பாட்டிலிருந்த அணையைத் தானே தகர்த்த ரஷ்யா…!

உக்ரைன் போர் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்த மிகப்பெரிய அணையொன்று அண்மையில் தகர்க்கப்பட்டது.

இந் நிலையில் அவ் அணையின் தகர்ப்பு பற்றிய சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஓராண்டுக்கு மேல் தொடரும் உக்ரைன் போரானது சிறிது காலம் அமைதியடைதிருப்பினும் மீண்டும் மெல்ல மீள ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் , ரஷ்யா ஆகியன தற்போது மாறி மாறி டிரோன் தாக்குதலை நடாத்தி வரும் நிலையில் நேற்றைய தினமும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ் வந்த நிலையில் கூடா ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடாத்த முயன்றதாக உக்ரைன் குற்றஞ் சுமத்தியது.

இது இவ்வாறிருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் நோவா ககோல்கா நகரத்திலுள்ள அணை தகர்க்கப்பட்டது. கடந்தாண்டு பெப்ரவரி முதவே இவ்வணை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்து வருகையில் அணை தகர்க்கப்பட்டமையானது பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்ரேன் போரில் மிக முக்கிய தாக்குதலாக பார்க்கப்படும் இத் தாக்குதலை உக்ரேன் இராணுவம ஏவுகணைத் தாக்குதல் மூலம் உடைத்ததாக ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது. இந் நிலையில் இதை ரஷ்யா தான் மேற்கொண்டதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியது.

மேற்குலக நாடுகளின் செல்வாக்கு உக்ரேனுக்கு அதிகரித்து வரும் நிலையில் ரஷ்யாவே அணையை உடைத்திருக்கலாமென எதிர்வகூறப்படுகின்றது. இதேவேளை மனித உரிமை நிறுவனமான குளோபல் ரைட்ஸ் சம்பியன்ஸ் என்ற அமைப்பைச் சார்ந்த வல்லுனர்களும் இவ் அணையை நேரில் சென்று பார்வையிட்டு அணை பற்றிய பாதிப்புக்கள் மற்றும் எவ்வாறு தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற முதற்கட்ட. ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

இவ் அறிக்கையில் அணையின் முக்காயமான இடங்களில் வெடிபொருட்களை வைத்தே தகர்க்கப்பட்டதை உறுதீயாக கூறமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தனது கட்டுப்பாட்டிலுள்ள அணையை ரஷ்யா தானே தகர்த்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாவதாகவும்
இவ்வாறு போர்க் காலப்பகுதியில் அணையை வேண்டுமென்றே தகர்ப்பது சர்வதேச விதிமுறையின் கீழ் போர்க் குற்றமாகவே கருதப்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recent News