Thursday, December 26, 2024
HomeLatest Newsஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெண்களிற்கு பாதுகாப்பில்லை...! பெண் எம்.பிக்கள் கண்ணீர் ...!

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெண்களிற்கு பாதுகாப்பில்லை…! பெண் எம்.பிக்கள் கண்ணீர் …!

ஆஸ்திரேலியாவின் பெண் எம்.பிக்கள் அந்நாட்டின் பாராளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செனட் சபையில் சுயேச்சை உறுப்பினரான லிடியா தோர்ப் ஆற்றிய உரையில், பலம் வாய்ந்த ஆண்களால் தாம் பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு ஆளானதாகவும், மாடிப்படிகளில் நகர விடாது பாலியல் தாக்குதலுக்கு உள்ளதாகவும் மற்றும் தமக்கு பாலியல் உறவுக்கான அழைப்புகள் வந்ததாகவும் கூறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்னதாக தன்னுடன் பணியாற்றும் செனட் உறுப்பினர் ஒருவர் மீது பாலியல் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை வைத்த தோர்ப், பின்னர் பாராளுமன்ற தடை வருவதற்கான ஆபத்து வந்ததும் அவற்றை திரும்பப் பெற்றுள்ளார்.

தற்பொழுது அவர், லிபரல் கட்சியைச் சேர்ந்த டேவிட் வான் மீது தாம் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளை மீண்டும் தொடுத்துள்ளார்.

வான் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளதாகவும் , பாராளுமன்ற விதிகளின் அடிப்படையில் தமக்கு நேர்ந்ததை மீண்டும் கூற வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கட்சியும் வான்னை இடை நீக்கம் செய்துள்ள நிலையில் தோர்ப்பின் குற்றச்சாட்டுகளை வான் மறுத்துள்ளதுடன் தாம் மனதளவில் நொறுங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில், தொகுப்பாளரும் முன்னாள் லிபரல் கட்சியின் எம்.பி.யுமான அமண்டா ஸ்டோக்கர், டேவிட் வான், ஒரு பாராளுமன்ற நிகழ்ச்சில் தனது அந்தரங்க உறுப்பை அழுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளதுடன் அதனை ரகசியமாக வைத்திருந்ததாகவும் லிடியா தோர்ப்பின் புகாரையடுத்து இனி அவ்வாறு இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 2020 ஆம் ஆண்டு , பாராளுமன்ற அலுவலகத்தில் முறைசாரா சமூகக் கூட்டத்தில் செனட்டர் வான் என்னை தகாத முறையில் தொட்டமையை தான் கண்டித்த நிலையில் அவர் தன்னிடம் மன்னிப்பு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent News