ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரும் அவரது உதவியாளரையும் பிலிப்பைன்ஸ் இராணுவம் சுட்டு கொலை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அமைப்பானது சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் செயற்பட்டு வருகின்ற நிலையில் பிலிப்பைன்ஸில் அபு சயாப் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.
பிலிப்பைன்ஸில் பொதுமக்கள் மீது தாக்குதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது மட்டுமன்றி, 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் மராவி என்ற பகுதியை கைப்பற்றி தமது நாடாக அறிவிக்கும் நோக்கில் இராணுவத்துக்கு எதிராக சண்டையிட்டதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த பயங்கரவாதிகளை விரட்டியடிக்க வேண்டும் என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முடிவு செய்தது.
இவ்வாறான சூழலிலே, தென்கிழக்கு ஆசியாவின் ஐ.எஸ்.பயங்கரவாத குழு தலைவரான பஹாருதின் பெனிட்டோ ஹட்ஜி சதார், பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனால், இராணுவத்தினர் லானோ டெல் சுர் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட வேளை மராவி நகர் அருகே முகாமிட்டு தங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்திய வேளை
குறித்த தாக்குதலில் சதாரும், அவரது உதவியாளரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மராவி நகர முற்றுகைக்கு தலைமை தாங்கிய முக்கிய கிளர்ச்சியாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.