Tuesday, December 24, 2024
HomeLatest Newsகடல் கடந்தும் கருணாநிதியின் 100 வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்....!

கடல் கடந்தும் கருணாநிதியின் 100 வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்….!

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

குறித்த பிறந்தநாள் கொண்டாட்டமானது டுபாயில் உள்ள தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் காரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வானது அமீரக திமுக பொறுப்பாளரும் வெளிநாடு வாழ் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமையில் இடம்பெற்றது.

கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம் பற்றியும் சாதனைகள் பற்றியும் அமீரக எழுத்தாளர் ஆசிப் மீரான் சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News