Tuesday, December 24, 2024
HomeLatest Newsதொடர் வயிற்றுவலியால் அவதியுற்ற பாப்பரசருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட குடல் அறுவை சிகிச்சை....!

தொடர் வயிற்றுவலியால் அவதியுற்ற பாப்பரசருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட குடல் அறுவை சிகிச்சை….!

96 வயது நிரம்பிய பாப்பரசர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு வரும் நிலையில் தாங்க முடியாத வலியின் காரணமாக நேற்றைய தினம் திடீரென அனுமதிககப்பட்ட பாப்பரசருக்கு குடல் அறுவை.சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மத்த் தலைவராக செயற்பட்டு வரும் இவர் தற்போது இத்தாலியின் வாடிகன் நகரில் வசித்து வருகின்றார். சம காலதில் அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்ப்டு வரும் நிலை தொடர்கின்றது.

கடந்த 2021 ஜீலை 4 ம் திகதி.பிரான்ஸிசிற்கு குடல் சார்ந்த நோய் நோய் ஏற்பட்டதையடுத்து பெருங்குடல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் சுவாசப் பிரச்சினை காரணமாக பாப்பரசர் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதியாகி 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

இ்ந் நிலையில் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையி் மீள அனுமதிகப்பட்டார். சமீப காலமாக அடிக்கடி தாங்க முடியாத வயிற்றுவலியை அனுபவித்து.வந்த நிலையில் மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து 2 மணி நேர குடல் அறுவை.சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றது.

சிகிச்சையின பின் சிறு ஓய்வை எடுத்துக்கொண்டு மீள தன் பணியை தொடரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recent News