Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் ரஷ்யாவில் திடீர் தரையிறக்கம்......!

இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் ரஷ்யாவில் திடீர் தரையிறக்கம்……!

டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டு 36 மணி நேரத்திற்கு பின் மாற்று விமானம் மூலம் அமெரிகா புறப்பட்டனர்.

குறித்த விமானமானது 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது.

இந்த விமானம் ரஷ்யா வான்வெளியில் பற்ந்துகொண்டிருந்த நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணஞ் செய்த பயணிகள் அருகிலுள்ள விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர். அமெரிக்கா வந்த விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதால் இதனை அமெரிக்கா மிக அவதானமாக அவதானித்து வந்தது.

இந் நிலையில் 36 மணி நேரமாக விமானத்தில்்பயணஞ் செய்தவர்கள் தவிர்த்த நிலையில் மாற்று விமானம் மூலம் சான்நிரான்ஸ்சிகோக்குப் பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டதனர்.

Recent News