Thursday, January 23, 2025
HomeLatest Newsஒரிசா புகையிரத விபத்தையறிந்து இதயமே நொறுங்கி விட்டது - அமெரிக்கா அதிபர் இரங்கல் அறிக்கை...!

ஒரிசா புகையிரத விபத்தையறிந்து இதயமே நொறுங்கி விட்டது – அமெரிக்கா அதிபர் இரங்கல் அறிக்கை…!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் புகையிரதம் உட்பட 3 புகையிரதங்கள் தடம்புரண்டதில் பயங்கர விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் இறந்துள்ள நிலையில் 900 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இவ் பாரதூர விபத்தில் இற்ந்தவர்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

புகையிரத விபத்து செய்தியை அறிந்தவுடன் இதயம் நொறுங்கி விட்டது. இந்தியர்களுடன் அமெரிக்கா மக்கள் துணை நிற்பதாக ஜோ பைடன் தனது இரங்கல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News