புகைபிடிக்காதவர்கள் வசிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக சுவீடன் மாற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடனில் தினசரி புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் ஐந்து சதவீதமானோர் மட்டுமே புகைப்பிடிக்கின்றனர். இது, கடந்த ஆண்டு 5.6 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் குறைவடைந்துள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆயினும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்த சன தொகையில் புகைப்பிடிப்பவர்களின் 20 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.புகைபிடிப்பதால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு, இளைஞர்கள் மத்தியில் அதிகளவு இருப்பதே இதற்குக் காரணம் என்று அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த நாட்டில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்த அதிகளவு விழிப்புணர்வு செய்த சுவீடன் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த உல்ரிகா முதலில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்டது.
பின்னர் பள்ளி மைதானங்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அது மட்டுமன்றி, புகையிலைப் பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டமை , அது பயன்பாட்டில் இல்லாததற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.