உக்ரைன் – ரஷ்ய போரானது ஓராண்டுகளை கடந்த நிலையில் இடம் பெற்று வருகின்றது. இரு நாடுகளிடையிலான இந்த போரினை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றன.
அந்த வரிசையில் உக்ரைனுக்கு தற்பொழுது புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அவற்றில், ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியனவும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிக்கு அதிபர் ஜோ பைடனும் ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.
மேலும், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.