Friday, November 15, 2024
HomeLatest Newsசெயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி..!தலை கவிழ்ந்த நாடு..!

செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி..!தலை கவிழ்ந்த நாடு..!

நாட்டின் முதலாவது செயற்கைக்கோளை ஏவும் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் நடுவானில் வெடித்துள்ளதுடன்,
வட கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்ததுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகொரியா செயற்கைக்கோள்களை செலுத்திய காரணத்தால் ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஆயினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாத காரணத்தால் எச்ரிக்கை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ராக்கெட் ஜப்பான் எல்லைக்குள் வருமாயின் அதனை சுட்டு வீழ்த்துவோம் என்று ஜப்பான் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்துள்ளது.

Recent News