Wednesday, December 25, 2024
HomeLatest Newsயுரேனஸில் துருவ சூறாவளி..!நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனை..!

யுரேனஸில் துருவ சூறாவளி..!நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனை..!

யுரேனஸில் துருவ சூறாவளி இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனிலிருந்து 2.9 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யுரேனஸில் வடதுருவத்தில் பொங்கி இயலும் சூறாவளிகள் செயற்படுவதனை குறிக்கும் வலுவான ஆதாரங்களை முதல் தடவையாக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

யுரேனஸ் கிரகத்தில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன் மூலமே இந்த துருவ சூறாவளியை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2015, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவு மூலம் கிரகங்களின் வளிமண்டலத்தை பற்றி ஆழமாக ஆராய விஞ்ஞானிகளுக்கு இது உதவியுள்ளது.

அத்துடன், இந்த கண்டுபிடிப்பின் மூலம் சூரிய குடும்பத்தில் வளிமண்டலங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News