பிரேசில் நாட்டில் அடல்கிசா சோரெஸ் ஆல்வ்ஸ் என்பவருக்கு மூன்று மகள் உள்ளனர். அதில் கிரேசிலி ஆல்வ்ஸ் ரெஜிஸ்சும் ஒருவர். கருவில் இருக்கும் பொழுதே அவர் விநோதமான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்த பின்னர், ஹைட்ரோகெபாலஸ் (hydrocephalus) என்ற நோய் காரணமாக அவரின் தலை மட்டும் பெரியதாக வளர்ந்துகொண்டே சென்றுள்ளது. அதாவது இந்த நோய் பாதிக்கப்பட்டிருந்தால், மூளையில் ஒருவிதமான திரவம் சுரந்து கொண்டே இருக்கும். அதனால் தலை அபரிவிதமான வளர்ச்சியடையும்.
கிரேசிலி தற்போது 29 வயது ஆகும் நிலையில், அவரால் நடக்க முடியாது, படுத்தப்படுக்கையாக இருக்கின்றார். மேலும், அவருக்குக் கண்களும் தெரியாது, பேசவும் முடியாது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 1 அல்லது 2 வருடம் வரையே உயிருடன் இருந்த நிலையில், இவரின் தாயின் அரவணைப்பினால் கிரேசிலி 29 வருடங்கள் முடிந்து 30 வருடத்தில் கால்பதிக்கவுள்ளார்.
தனது மகள் படுத்தப்படுக்கையாக இருப்பினும் அவரை பெரிய குழந்தையாகவே தான் பார்த்துக் கொள்வதாக அவரின் தாய் கூறியுள்ளார்.
மேலும், குழந்தை என்பதே ஒரு மகிழ்ச்சியான வார்த்தை என்பதால் கிரேசிலியை அனைவரும் பெரிய தலை குழந்தை என்று அழைப்பதை தான் தவறாகப் பார்ப்பது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் சில நேரங்களில் வருத்தமாகவே உள்ளதாகவும் உணர்ச்சிப் பூர்வமாகக் கூறி யாராக இருப்பினும் தாயாக வரமுடியாது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.