நிலவின் மிகத்துல்லியமான புகைப்படத்தினை அமெரிக்காவின் வானியல் ஆய்வாளர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரும், ஆய்வாளருமான அண்ட்ரூ மெக்கார்தி நிலவின் மிகத்துல்லியமான புகைப்படத்தை படம் பிடித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் எடுத்த புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்தில் நிலவின் மேற்பரப்பு தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை எடுப்பதற்காக 2 தொலைநோக்கிகளையும், 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான தனி புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளதாக அண்ட்ரூ மெக்கார்தி கூறியுள்ளார்.
அத்துடன் நிலவின் அதிக துல்லியத்தைப் பெறுவதற்கு 2 வாரங்கள் தொடர்ந்து பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த புகைப்படம் ஒரு ஜிகா பிக்சல் அளவு கொண்டது என்றும், இதனை அதே துல்லியத்துடன் பதிவிறக்கம் செய்யும் போது கணிணியின் செயல்வேகம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவை மட்டுமன்றி, தான் புகைப்படத்தை எடுத்த விதம் குறித்த வீடியோ ஒன்றையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.