Friday, November 22, 2024
HomeLatest Newsநாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை..!

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை..!

கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் சில்லறை விலை சிறு தொகையினால் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி வரி, பெறுமதி சேர் வரி உள்ளிட்ட வரிகளினால் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், துருக்கியலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும் அங்கு ஏற்பட்ட விலை வீழ்ச்சியினால் பெரிய தொகையில் மாவின் விலை உயர்த்தப்படாது எனவும் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Recent News