Thursday, December 26, 2024
HomeLatest Newsஆளுங்கட்சி கூட்டத்தில் குரங்குகளால் சலசலப்பு - குரங்கிற்கு இன்னும் விசா கிடைக்கவில்லை -...

ஆளுங்கட்சி கூட்டத்தில் குரங்குகளால் சலசலப்பு – குரங்கிற்கு இன்னும் விசா கிடைக்கவில்லை – ஜனாதிபதி நகைப்பு..!

ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வேளை சமகால அரசியல் நிலவரங்களுக்கு அப்பால் ‘குரங்கு விவகாரம்’ பற்றியும் பேசியுள்ளனர்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “ இந்த குரங்கு தொல்லை தாங்க முடியவில்லை என்றும் எனது தொகுதியிலும் நிலைமை மோசமாக உள்ளதால் அவற்றை சீனாவுக்கு அனுப்பும் முடிவை நிறுத்த கூடாது என்று கூறியுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று”வினா எழுப்பினாவும் எழுப்பியுள்ளார்.

அதற்கு ஜனாதிபதி, குரங்குகளுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என நகைப்புடன் பதிலளித்துள்ளார்.

அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசங்க, குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப கூடாது எனவும் குரங்குகளின் மூளையை அவர்கள் உண்ணுவதாகவும் தானும் வீட்டில் 20 வருடங்களாக குரங்கு வளர்த்தவன் என்பதுடன் அவற்றால் அவ்வளவு பாதிப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்தையடுத்து கூட்டத்தில் சிரிப்பொலி மேலோங்கியதுடன், அப்படியானால் குரங்குகளை உங்கள் வீட்டில் விடலாம், அதுமட்டுமல்ல உங்களுக்கு குரங்குதுறை அமைச்சையும் வழங்கலாம் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றுக்கும் மேலாக மஹிந்தானந்த அளுத்கமகே, “ இது சிரிப்பதற்குரிய விடயம் அல்ல, குரங்கு பிரச்சினை பெரும் பிரச்சினை எனவும் இரண்டு சீன நிறுவனங்கள் தன்னுடன் பேசியதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு, இறைச்சிக்காக அல்ல, மிருகக்காட்சிசாலைக்கே கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.” எனவும் ஒரு போடு போட அவருக்கு விவசாயத்துறை அமைச்சரும் துணையாக நின்றார் என கூறப்பட்டுள்ளது.

Recent News