Wednesday, December 25, 2024
HomeLatest Newsரணிலின் வீட்டிற்கு தீ வைத்த ஸ்ரீரங்கா ..!

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த ஸ்ரீரங்கா ..!

பொதுமக்களின் போராட்டத்தின் பொழுது, கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரினை குற்றப்புலனாய்வு திணைக்களம் பெயரிட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் மூலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவையே சந்தேக நபராக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று பெயரிட்டுள்ளது.

இதன்படி, ஜே.ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாட்சிகளிடம் செல்வாக்கு செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தீயிட்டு கொழுத்தியதுடன், சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News