Wednesday, December 25, 2024
HomeLatest Newsதிடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்கள்..!

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 மாணவர்கள்..!

ஒரே தடவையில் 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

குறித்த மாணவர்கள் நானுஓயா – கிளாசோ பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையிலே இன்றைய தினம் அனுமதிப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களிற்கு பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News