Friday, November 22, 2024
HomeLatest NewsIndia Newsசாதி பாகுபாட்டிற்கு தடை விதித்த அமெரிக்காவின் முதல் மாகாணம் - காரணமாகிய தமிழ் பெண்..!

சாதி பாகுபாட்டிற்கு தடை விதித்த அமெரிக்காவின் முதல் மாகாணம் – காரணமாகிய தமிழ் பெண்..!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாதி ரீதியான பாகுபாட்டைத் தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கலிபோர்னியாவானது டெக் துறையில் முதன்மை இடத்தினை பெறுவதுடன் அங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

இவ்வாறான சூழலிலே, கலிபோர்னியா மாகாணத்தில் சாதிய பாகுபாட்டிற்குத் தடை விதிக்கும் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்குத் தடை விதித்துள்ள முதல் மாகாணம் என்ற பெருமையினையும் இது பெறுகின்றது.

இந்த சட்டமானது கொண்டுவரப்பட காரணம் அமெரிக்காவில் வாழும் ஓசி பிரிவு இந்துக்கள் அங்கு வாழும் ஒரு வகை இந்து மக்களை பின்தள்ளப்பட்ட இந்துக்கள் என இழிவுபடுத்தியும், சாதி பாகுபாட்டினை காட்டியும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

துன்புறுத்தல் தொடர்பாக புகாரளிக்கப்பட்ட போதிலும் அதனை அமெரிக்க சமூகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதனால் இதற்கெதிராக அங்கு பிரேம் பறையா, தேன்மொழி சௌந்தரராஜன் உள்ளிட்ட பல தலித் போராளிகள் கடுமையாக போராடினார்கள். அவர்களின் போராட்டத்தின் விளைவாக அமெரிக்கர்கள் சாதி வெறியின் தாக்கத்தினை உணர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த சட்டம் அங்கே கொண்டு வரப்பட முக்கியமான காரணமாக இருந்தவர் தேன்மொழி சௌந்தரராஜன் என்னும் தமிழ் பெண். அவர் இது தொடர்பாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் ,உரையாடல்கள் மற்றும் கலந்துரையாடல் போன்றவற்றை தளராது மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த சட்டத்தினை புதிய செனட்டராக தேர்வான ஆயிஷா வஹாப் என்ற இஸ்லாமிய பின்னணி கொண்ட செனட்டர்ரே அறிமுகம் செய்துள்ளார்.

பல்கலைக்கழகம் தாண்டி தற்போது, ஜாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதாவிற்கு கலிபோர்னியா மாகாண செனட் நீதிக்குழு ஒரு மனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆயிஷா வஹாப், இந்த மசோதா சாதி, குடும்பம் அல்லது வம்சாவளி என எந்தவொரு பாகுபாடுமின்றி வாழ்க்கையை வாழ அனுமதிப்பதுடன், இந்த மசோதா நமது சட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், பலதரப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும் உதவும்” எனவும் ஆயிஷா வஹாப் தெரிவித்துள்ளார்.

Recent News