சூடானிலுள்ள சீனப் பிரஜைகளை பாதுகாப்பாக மீட்டெடுத்து தனது நாட்டிற்கு கொண்டு வருவதற்காக தனது கடற்படையை சூடானுக்கு சீனா அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை சீன பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
சூடானில் நடைபெறும் போர் காரணமாக, பல்வேறு நாடுகள் தமது தூதரக ஊழியர்களையும், பிரஜைகளையும், தரை, வான், கடல் என பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்த 72 மணித்தியால போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்ப்பட்டுள்ளன.
இருப்பினும் சில இடங்களில் நேற்றும் மோதல்கள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சூடானிலுள்ள சீனப் பிரஜைகளின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சீன கடற்படையினர் நேற்று அனுப்பப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் டான் கெபேய் தெரிவித்துள்ளார்.