இங்கிலாந்தின் துணை பிரதமரான டொமினிக் ராப் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளை பொறுப்பேற்று பதவி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது, டொமினிக் ராப் துணை பிரதமராக பதவி வகித்ததுடன் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பின்னரும் டொமினிக் துணை பிரதமராக தொடர்ந்தும் இருந்து வந்தார்.
அத்துடன் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பும் டொமினிக்கிற்கு அதிகமாக வழங்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாககவும் மற்றும் அமைச்சரவையின் முன்னாள் ஊழியர்களை டொமினிக் மிரட்டியதாக புகார் எழுந்தாது.
இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்ட பொழுது குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டால் தான் பதவி விலகுவதாக டொமினிக் முன்னதாக அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்ததிற்கு ஏற்ப அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டொம்னிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.