Sunday, April 20, 2025
HomeLatest Newsமீண்டும் இன்று கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு..!

மீண்டும் இன்று கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானத்தினை எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமன்றி, தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கான உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சிமன்ற தேர்தலினை நடத்துவதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாகவே தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News