Friday, November 22, 2024
HomeLatest Newsபெற்றோல் வாகன இறக்குமதிக்கு தடை - அமைச்சர் மனுச நாணயக்கார வெளியிட்ட தகவல் !

பெற்றோல் வாகன இறக்குமதிக்கு தடை – அமைச்சர் மனுச நாணயக்கார வெளியிட்ட தகவல் !

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கபெற்றால் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணிக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

புதிய அமைச்சரவை புதிய வழியில் சிந்திக்கும் அமைச்சரவை என்றும் அமைச்சரவை இதற்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் ஹைபிரிட் கார்களை சேர்த்து பெட்ரோல் கார்களை இறக்குமதி செய்ய வாய்ப்பளிக்க சில அமைச்சர்கள் முன்மொழிந்திருந்தாக அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும் என அரசின் தீர்மானமாகவுள்ளது.

இதகாலேயே மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

அரசாங்கம் என்ற வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்ற முடிவில் நாடு உள்ளது.

எதிர்காலத்தில் அனைத்து வாகன இறக்குமதியிலும் மின்சார வாகனங்கள் மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News