Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் அதிகளவு வீண் விரயமாகும் மரக்கறி, பழங்கள்! - வெளியான அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் அதிகளவு வீண் விரயமாகும் மரக்கறி, பழங்கள்! – வெளியான அதிர்ச்சி அறிக்கை

நாட்டில் வருடாந்தம் முறையான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்மையினால், 19 சதவீத மரக்கறிகளும் 21 சதவீத பழங்களும் வீண் விரயம் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்படி, 2 இலட்சத்து 21 ஆயிரத்து 955 மெற்றிக் டன் மறக்கரிகளும், 2 இலட்சத்து 90 ஆயிரத்து 151 மெற்றக் டன் பழங்களும் முறையான போக்குவரத்து இன்மையால் அழிவடைவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அறுவடைக்குப் பின்னர் 40 சதவீதமான அறுவடை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நகர் பகுதிகளில் விரயமாகும் உணவின் அளவு அதிகமாக உள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் விரயமாக்கப்பட்ட உணவின் அளவு 10 மில்லியன் மக்களுக்கு உணவளிக்க போதுமானது என விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Recent News