Wednesday, December 25, 2024
HomeLatest Newsஹாலிவுட் படம் பார்த்தால்.. சின்ன குழந்தைக்கும் 5 ஆண்டு சிறை! பெற்றோருக்கும் சிறை ! அதிரடி...

ஹாலிவுட் படம் பார்த்தால்.. சின்ன குழந்தைக்கும் 5 ஆண்டு சிறை! பெற்றோருக்கும் சிறை ! அதிரடி உத்தரவு !!

வடகொரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மேற்கத்தியக் கலாச்சாரம் பரவுவதைத் தடுக்க அவர்கள் மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி ஹாலிவுட் படங்களைப் பார்த்தாலே பெற்றோருக்கும் குழந்தைக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் இன்னுமே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் ஒரு சில நாடுகளில் ஒன்று வடகொரியா. நமது நாட்டை போலத் தேர்தல் மூலம் எல்லாம் அங்கு ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை. எப்போதும் ராணுவ ஆட்சி தான்.

அங்கு கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உலகின் மற்ற நாடுகளிடம் இருந்து தனித்தே இருக்கிறது. சீனா உள்ளிட்ட ஓரிரு நாடுகள் மட்டுமே வணிக உறவை வைத்துள்ளது.

வெளியுலகிற்கும் வடகொரியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை.. ஊடகங்களுக்கும் அங்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் அங்கிருக்கும் மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது. வடகொரியா சென்று திரும்பியவர்கள் அங்குள்ள மக்கள் மோசமான ஏழ்மை நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு இணையம் கூட நமக்கு இருப்பதைப் போல அனைவருக்கும் இல்லை. குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கும் ராணுவத்திற்கும் மட்டுமே இணையச் சேவையும் கிடைக்கும்.

அங்குத் தினசரி மின் தடையும் பல மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அங்குப் பல வினோதமான சட்டங்களும் கூட இருக்கவே செய்கிறது. அதேபோல அங்கு மொத்தமே இரண்டு சேனல்கள் தான். அதுவும் அரசு சேனல்கள். மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதையும் அங்கு அரசே தீர்மானிக்கிறது. இருப்பினும், அதையும் தாண்டி கள்ளச் சந்தையில் அங்கு ஹாலிவுட் படங்கள் விற்கப்படுமாம். அதை வாங்கி குடும்பம் குடும்பமாக ரகசியமாகப் பார்த்தும் வருகிறார்கள்.

இதைத் தெரிந்து கொண்ட வடகொரிய அரசு இதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதாவது ஹாலிவுட் படங்கள், சீரியல்களை பார்த்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய ஊடகங்களின் ஊடுருவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பது கண்டறியப்பட்டால்… பெற்றோரைச் சிறையில் அடைப்போம் என்று வட கொரியா இப்போது மிரட்டியுள்ளது.

குழந்தை ஹாலிவுட் படம் அல்லது தென் கொரிய படத்தைப் பார்த்தால்.. பெற்றோர் 6 மாதங்கள் முகாமில் இருக்க வேண்டும். ஹாலிவுட் படத்தைப் பார்த்த குழந்தை நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஐந்தாண்டு தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு முன்பு வரை இந்த விவகாரத்தில் குழந்தைகள் சிக்கினால்.. அவர்கள் பெற்றோரைக் கடுமையாக எச்சரித்துவிட்டு அனுப்பிவிடுவார்கள். இதைக் கண்காணிக்க வடகொரிய அரசு சிறப்புக் குழுக்களைக் கூட அமைக்கிறதாம்.

இனியும் திருட்டுத்தனமான படங்களைப் பார்ப்போருக்கு அரசு கருணை காட்டாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிம் ஜாங் உன்னின் சோசலிச கொள்கைக்கு ஏற்ப தங்கள் குழந்தைகளைச் சரியாக வளர்க்கத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல், அங்கு நடனம், பேசுவது மற்றும் பாடுவது உள்ளிட்ட விஷயங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recent News