Tuesday, April 30, 2024
HomeLatest Newsஒரு நாள் இந்தியாவில் ஊடகங்களே இருக்காது- மம்தா பானர்ஜி!

ஒரு நாள் இந்தியாவில் ஊடகங்களே இருக்காது- மம்தா பானர்ஜி!

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையானது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதுடன், பிபிசி நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை ஊடக சுதந்திரத்தைப் பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிபிசியில் வருமான வரித் துறையின் சோதனைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு நாள், இந்தியாவில் எந்த ஊடகமும் இருக்காது என்று முதல்வர் பானர்ஜி கூறியுள்ளார். 

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தனர்.  வருமானவரித் துறை சோதனையை அடுத்து அலுவலக பணியாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் 2002 குஜராத் கலவரம் பற்றிய பிபிசி ஆவணப்படம் அரசியல் சர்ச்சையைத் தூண்டிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு அந்த ஆவணப் படத்தைப் பகிரும் இணைப்புகளை நீக்குமாறு இந்த மத்திய அரசு உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Recent News