பிரான்ஸில் குளித்துக்கொண்டிருக்கும் போது தொலைபேசியை மினேற்றிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவ பிரான்சின் மத்திய தெற்கு பகுதியான Tence (Haute-Loire) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
25 வயதுடைய இளைஞன் ஒருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது, தனது தொலைபேசியை மின்னேற்றியுள்ளார்.
அதன்போது தொலைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளது. அதையடுத்து மின்சாரம் தாக்கி இளைஞன் பலியாகியுள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினர் விரைவாக சம்பவ இடத்துக்கு வந்தடைந்தபோதும், அவர்களால் இளைஞனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
பெரிதளவில் ஆபத்து இல்லை என பொதுவாக நம்பப்படுகிற இந்த தொலைபேசி மின்னேற்றும் விபத்துக்களால் கடந்த 2020 ஆம் ஆண்டில் 40 பேர் பிரான்சில் பலியானதாகவும், 3,000 விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் தேசிய மின்னணு சாதனங்களுக்கான பாதுகாப்பு அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.