Saturday, May 4, 2024
HomeLatest Newsஸ்மார்ட்போன் துறையில் கால்பதித்த கொக்கக் கோலா: லேட்டஸ் அப்டேட்!

ஸ்மார்ட்போன் துறையில் கால்பதித்த கொக்கக் கோலா: லேட்டஸ் அப்டேட்!

ரியல்மி நிறுவனம் கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து விரைவில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, பல ஆண்டுகளாக குளிர்பான சந்தையின் மறுக்கமுடியாத ராஜாவாக இருந்து வருகிறது. பல்வேறு சர்சைகளில் சிக்கி வந்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறது. இந்த இடத்தை மேலும் வழுவாக்க ஸ்மார்ட்போன் பிரிவில் ஆதிக்கம் செலுத்த உள்ளது.

இதுவரை பாட்டில்களில் கிடைத்த கோகோலா தற்போது ஸ்மார்ட்போன் வடிவில் நமது பாக்கெட்டுகளுக்கு வரவிருக்கிறது. இதற்காக ரியல்மி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கவுள்ளது.

இந்த டீசரின்படி ரியல்மி நிறுவனம் கோகோ கோலா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையில் இடம்பெற்று இருக்கிறது. இதற்காக, கோகோ கோலா நிறுவனம் ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டீசரில் உறுதிப்படுத்துவிதமாக, “Something exiting is Bubbling” =”realme is set to get really refreshing” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும், குளிர்பான நிறுவனங்களுடன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைப்பது முதல் முறை இல்லை. முன்னதாக 2015 வாக்கில் பெப்சி போன் P1s மாடலை ஷென்சென் ஸ்கூபி கம்யுனிகேஷன் எக்யுப்மெண்ட் கோ லிமிடெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்பட்சத்தில் கோகோ கோலா பிரியர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை. இதன் தோற்றத்தை பொறுத்தவரை, ரியல்மி 10 4ஜி போன்றே காட்சியளிக்கிறது. கோகோ கோலா பிராண்டின் பிரதிபலிக்கும் விதமாக சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது.

அதுபோக இரட்டை கேமரா சென்சார்கள், எல்இடிஃபிளாஷ், வலது புறத்தில் வால்யும் ராக்கர், வளைந்த எட்ஜ்கள் உள்ளன.சந்தையில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளியிடுவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கோகோ கோலா இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பிராண்ட் என்பதால் இது எளிதில் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,தொழில்நுட்பம் சாராத நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இறங்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஃபேர்போன் மற்றும் ரேசர் என்ற இரு நிறுவனங்ள் வெற்றி கண்டுள்ளன.

கோகோ கோலா ஸ்மார்ட்போன், ரியல்மி 10 4ஜி மாடலின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருந்தால் அதே 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 50 எம்பி பிரைமரி கேமரா, பன்ச் ஹோல், கட் அவுட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜிபி ரேம், LPDDR4X. ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்டவை இடம்பெறலாம்.

Recent News